23.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
23.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: எதிர்பாராத நற்செய்தி மாலை நேரத்துக்குப் பிறகு வரும்.

பரணி: பெண்களுக்கு ஆன்மிகப் பணிகள் செய்யும் வாய்ப்பு தேடிவரும்.

கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் அக்கறையின்றி அலட்சியம் காட்ட வேண்டாம்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: நிறைய முயற்சி செய்து புதிய விஷயம் தொடங்குவீர்கள்.

ரோகிணி: பணியாளர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: விவாதத்தால் மனக்கசப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: வெளிவட்டாரத்தில் உங்கள் மேலிருந்த மரியாதை கூடும்.

திருவாதிரை: குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

புனர்பூசம் 1,2,3: பழைய நட்பு, சொந்தங்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனக்குழப்பம் மறையும்.

பூசம்: அநாவசியக் குழப்பத்தினால் தவறு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆயில்யம்: யாரையும் அலட்சியம் செய்துவிட்டு பிறகு வருந்த வேண்டாம்.

சிம்மம்: 

மகம்: தன்னம்பிக்கை அதிகரிப்பதால் செயல்களில் நேர்த்தி இருக்கும்.

பூரம்: நண்பர், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

உத்திரம் 1: அறிவாற்றல் பளிச்சிடும். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: நிதி நிலைமையில் எந்த வித மாறுதலும் இருக்காது.

அஸ்தம்: மனஅமைதி மீளும். உடல்நலத்தில் இருந்த பிரச்னை தீரும்.

சித்திரை 1,2: மற்றவர் பொறுப்பை ஏற்க வேண்டாம். தீயோர் தொடர்பு கூடாது

துலாம்: 

சித்திரை 3,4: வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.

சுவாதி: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.

விசாகம் 1,2,3: பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். வியாபார வளர்ச்சி உண்டு.

விருச்சிகம்: 

விசாகம் 4: பண வரவு ஓரளவு சிறப்பாக அமையும். நிம்மதி உண்டு.

அனுஷம்: பிரச்னை ஒன்று தீரும். பணிச்சுமை சிரமம் தரலாம்.

கேட்டை: புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

தனுசு: 

மூலம்: பல நாட்களாக எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்பு வரும்.

பூராடம்: குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள்.

உத்திராடம் 1: உறவினர்களுக்கு ஏற்பட்ட தொல்லையை அகற்றுவீர்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பழைய சொத்துக்களை சுமார் விலைக்கு விற்பீர்கள்.

திருவோணம்: வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

அவிட்டம் 1,2: கலைத்துறையில் ஈடுபடுவது பற்றிய ஆர்வம் வரும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: கலைத்துறையினர் வளர்ச்சி காண்பர். நட்பு வட்டம் விரியும்.

சதயம்: புதிய பொருள் வாங்குவதால் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: வாகனங்களால் முன்பிருந்த செலவு குறையும். லாபம் வரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: வேறு மதத்தினரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

உத்திரட்டாதி: சகபணியாளர்கள் ஒத்துழைப்பர். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

ரேவதி: வெளிநாட்டுத் தொடர்பு மூலம் வருமானம் காண்பீர்கள்.