“கனவு நனவாகியுள்ளது” - கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ ஷிவானி

Keerthi
4 years ago
“கனவு நனவாகியுள்ளது” - கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ ஷிவானி

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆனால், இதுவரை ஹீரோயின்கள் குறிந்து எந்த அப்டேட்டும் படக்குழு கொடுக்கவில்லை.
இந்த நிலையில், நடிகை ஷிவானி ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருக்கிறார். ‘பகல் நிலவு’, ‘ரெட்டை ரோஜா’ சீரியல்களில் ஹீரோயினாக நடித்த ஷிவானி ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியுடன் ஷிவானி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ”’விக்ரம்’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். கனவு நனவாகியுள்ளது. நன்றி லோகேஷ் கனகராஜ் சார், நன்றி விஜய் சேதுபதி சார்” என்று உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘விக்ரம்’ படத்தின் விஜய் சேதுபதி - கமல்ஹாசன் காட்சிகள் காரைக்குடியில் வரும் 27 ஆம் தேதி தொடங்குவதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார். ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4