24.08.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். வாழ்வு வளம் பெறும்.
பரணி: முன்னேற்றம் காண பட்ட பாடு பலன் தரும். மனம் நிறையும்.
கார்த்திகை 1: பொறுப்பை நிறைவேற்றுவீர்கள். இனிய நினைவுகள் சூழும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பயம் அகலும்.
ரோகிணி: பணிச்சுமை பொருட்படுத்தும் அளவு இருக்காது. கவலை தீரும்.
மிருகசீரிடம் 1,2: பிரச்னை ஒன்றை நண்பருடன் பகிர்ந்து தீர்வு காண்பீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: உறவினரால் சிறு சிக்கல் உண்டாகி இன்றைக்கே தீரும்.
திருவாதிரை: உடல் ஆரோக்கியத்தில் சிறிதளவேனும் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: மனதில் திடம் கூடும். எதையும் எதிர்கொள்ளும் திறமை வரும்.
கடகம்:
புனர்பூசம் 4: பல கால நண்பர் உதவுவார். பயணத்தால் ஆதாயம் உண்டு.
பூசம்: உங்களை பற்றிய விமர்சனங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
ஆயில்யம்: புதிய தொடர்பு வரும்போது ஆராய்ந்து நட்பை ஏற்கவும்.
சிம்மம்:
மகம்: உங்கள் பேச்சு உங்களுக்கே எதிராகத் திரும்பாமல் கவனம் தேவை.
பூரம்: புது வேலை அமைய வாய்ப்புள்ளது. உங்களின் செல்வாக்கு உயரும்.
உத்திரம் 1: உறவினர் வட்டத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: அதிர்ஷ்டத்தை விட உழைப்பால் உயர முயற்சி செய்யுங்கள்
அஸ்தம்: உற்சாகமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: குடும்பத்தில் நல்ல சம்பந்தம் கூடி வரும். பயம் நீங்கும்.
துலாம்:
சித்திரை 3,4: பேச்சுவார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும்.
சுவாதி: அவசிய, அநாவசிய செலவுகள் இருக்கும். உற்சாகம் குறையாது.
விசாகம் 1,2,3: சமையலறைக்கு தேவையான சாதனம் ஒன்று வாங்குவீர்கள்
விருச்சிகம்:
விசாகம் 4: குடும்பத்தில் முன்பிருந்த வருத்தங்கள் நீங்கி உற்சாகம் வரும்.
அனுஷம்: உங்கள் அனுபவ அறிவு காரணமாக மற்றவர்கள் பயனடைவர்.
கேட்டை: மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். சிந்தித்து செயல்படுவீர்கள்.
தனுசு:
மூலம்: மகிழ்ச்சி காரணமாக வீடு களைகட்டும். பணியில் கவனம் தேவை.
பூராடம்: தைரியமாக ரிஸ்க் எடுக்க இது உகந்த நேரம் அல்ல.
உத்திராடம் 1: உற்சாகமான நாள். விருந்து ஒன்றில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை உண்டு.
திருவோணம்: கலை ஆர்வம் காரணமாக மகிழ்ச்சியாகப் பொழுது போகும்.
அவிட்டம் 1,2: அளவுக்கும் தகுதிக்கும் அதிகமாக ஆசைப்பட வேண்டாம்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வாக்குவாதத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
சதயம்: சகிப்புத் தன்மை தேவைப்படும். உங்களின் செல்வாக்கு கூடும்
பூரட்டாதி 1,2,3: பணியிடத்திலும், கல்வி நிலையத்திலும் உங்கள் கவரும் தன்மை கூடும்.
மீனம்:
பூரட்டாதி 4: எந்த விஷயத்திலும் அதிகப் பொறுமை தேவைப்படும் நாள்.
உத்திரட்டாதி: செலவுகள் அதிகரிக்கும். எதையும் இயல்பாக எடுப்பீர்கள்.
ரேவதி: பல வேலைகளை ஒருசேர கவனிக்க வேண்டி வரக்கூடும்.