இலங்கையில் 12 வயது சிறுமியை பலியெடுத்தது கொவிட்

#SriLanka #Death #Student #Corona Virus #Covid 19
Yuga
4 years ago
இலங்கையில் 12 வயது சிறுமியை பலியெடுத்தது கொவிட்

கொழும்பு – இராஜகிரிய – கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியின் உயிரை கொவிட் வைரஸ் பலியெடுத்துள்ளது.

நாவல – ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தின் 7ம் தரத்தில் கல்வி பயின்ற, அபிமானி நவோதயா சேரசுந்தரவே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் குறித்த சிறுமிக்கு சுகயீனம் ஏற்பட்டதுடன், பின்னர் சிறுமிக்கு சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுமி கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு நடத்தப்பட்ட …… பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சிறுமி ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்தவொரு குழந்தைக்கும் ஏற்படக்கூடாது எனவும், கொரோனாவை வெற்றிக் கொள்ள இடமளிக்கக்கூடாது எனவும் உயிரிழந்த சிறுமியின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4