ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார், இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது?

#Congratulations
Reha
3 years ago
ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார், இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது?

இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? (பசு , பந்து போன்றவை). இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

  • நெடில் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : மாடு , பாகு
  • ஆயுதத் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : எஃகு
  • உயிர்த் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
  • வன் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
  • மென் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
  • இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

  • 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
  • உதாரணம்.. மாடு , ஆடு …. இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
  • 2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
  • பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )
  • 2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
  • செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
  • 3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
  • வாக்கு – வாக்குகள் (வாக்குக்கள் அன்று)
  • கணக்கு – கணக்குகள்
  • நாக்கு – நாக்குகள்
  • வாத்து- வாத்துகள்
  • வாழ்த்து – வாழ்த்துகள் (வாழ்த்துக்கள் என்பது தவறு)
  • உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.
  • தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்
  • அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.

வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் சரியா?

வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களை நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!