இந்த வார ராசி பலன் 23-08-2021 To 29-08-2021

#Rasipalan #Weekly-Rasipalan
Reha
3 years ago
இந்த வார ராசி பலன் 23-08-2021 To 29-08-2021

மேஷ ராசி 

  • மனதில் புது புது சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது.
  • நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
  • குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையிடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்.
  • உடன்பிறப்புகள் மீது அதிகம் அக்கறை செலுத்தவும்.
  • குடும்பத்தில் செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை.
  • கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.
  • ஏற்கனவே வாங்கிய பழைய கடன்களை அடைத்துவிடுவது நல்லது. உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும்.
  • உத்தியோகத்தில் பாராட்டை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

 

ரிஷப ராசி 

  • உங்கள் கோப தாபங்களை குறைத்து கொள்வது நல்லது.
  • குடியிருக்கும் வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் வரும். உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மாற்றம் தெரியும்.
  • திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும்.
  • குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும்.
  • வருமானத்திற்கு மீறிய செலவுகள் உண்டாகும்.
  • புது வாகனம் வாங்குவது குறித்த யோசனை இருக்கும்.
  • மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். உங்கள் மனம் போல் எல்லாம் நல்லபடியே நடக்கும். மனமகிழ்ச்சி பல மடங்கு கூடும்.
  • தெய்வ பலத்தால் எல்லாம் எண்ணியபடி ஈடேறும்.
  • உத்யோகத்தில் பெயரும், புகழும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும்.

பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

 

மிதுன ராசி 

  • நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் அதில் வேகமும், விவேகமும் இருக்கும்.
  • மனதில் போட்டு வைத்த திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக கண்ட கனவுகள் விரைவில் நிறைவேறும். வேண்டாத அலைச்சலால் உடல் நலம் பாதிக்கலாம்.
  • பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மனஸ்தாபம் வரலாம்.
  • எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்க தாமதம் ஆகலாம்.
  • கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்.
  • குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். பணப்புழக்கம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
  • உத்தியோகத்தில் பணி மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும்.

பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

 

கடக ராசி 

  • குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் நிறையவே இருக்கும்.
  • புதிய முயற்சிகள் ஏதேனும் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம்.
  • நெருங்கிய உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கவும்.
  • ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
  • வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதின் மூலம் செலவுகள் கூடும்.
  • குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் உடல் நிலையை கண்காணிக்கவும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
  • உத்தியோகத்தில் நிலவிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும்.

பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

 

சிம்ம ராசி  

  • குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும்.
  • குடும்ப பெருமையை உயர்த்த வழி கிடைக்கும்.
  • மறைமுக எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும்.
  • பழைய பகையை மறந்து உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.
  • குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
  • உடன்பிறந்தவர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது.
  • வெளிநாடு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும்.
  • கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் விலகும்.
  • குடும்பத்திற்கு இது வரை இருந்த எதிப்புகள் அடங்கும்.
  • எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை விரைவில் கிடைக்கும்.
  • உத்யோகத்தில் வேலைபளு நாளுக்கு நாள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

 

கன்னி ராசி 

  • குடும்ப தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
  • புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்லமுறையில் வெற்றிபெறும்.
  • ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருக்கும்.
  • பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
  • தேவையற்ற செலவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
  • முக்கிய விஷயமாக புது நபர்களை சந்திக்க வேண்டிவரும்.
  • கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.
  • கணவன் மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.
  • பூர்விக சொத்து வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும்.
  • உத்யோகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்

 

துலாம் ராசி

  • குடும்பத்தில் நீங்கள் நினைத்ததை போலவே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேலோங்கும். தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும்.
  • நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
  • குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. மற்றவர்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும்.
  • சில எதிர்பாராத பொருள் மற்றும் பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
  • புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வழக்கு விவகாரங்களில் பணம் நிறைய செலவாகும்.
  • உங்களிடம் விவாதம் செய்தவர்கள் கூட விலகி நிற்பர்.
  • உத்யோகத்தில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

 

விருச்சிக ராசி  

  • குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டு.
  • வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும்.
  • இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைவில் முடியும். உங்களது எண்ணங்களும் திட்டங்களும் செயல் வடிவம் பெரும்.
  • உறவினர்கள் சிலரால் ஆதாயம் உண்டு. ஒரு சிலர் வீடு, மனை விற்று அதில் லாபம் பெறுவர்.
  • குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பொருளாதார பற்றாக்குறை இருக்காது.
  • உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்பு ஏற்படலாம், எனவே கவனமாக இருக்கவும். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும்.
  • உடன்பிறப்புகளுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • உத்யோகத்தில் எதிர்த்து நின்றவர்கள் தானாக விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

 

தனுசு ராசி 

  • குடும்பத்தில் பெரிய நன்மைகள் ஏதும் இல்லை என்றாலும் சிறிய நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு.
  • பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம்.
  • வீட்டில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும்.
  • கணவன் மனைவி உறவில் நல்ல ஒற்றுமை இருக்கும்.
  • வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
  • உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களுடன் அன்பு பாராட்டுவது நல்லது.
  • உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
  • உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். சிறிய முதலீட்டில் புது தொழில் தொடங்கும் யோகம் அமையும்.

பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்.

 

மகர ராசி 

  • குடும்பத்தில் பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். எதிரிகள் விலகி நிற்பர்.
  • திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • எதிர்பார்த்த பணம் ஒரு சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும்.
  • வீட்டில் நவீன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறப்புகள் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும்.
  • எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு.
  • திருமண காரியங்கள் விரைவில் கை கூடி வரும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை.
  • உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபடவும்

 

கும்ப ராசி 

  • குடும்ப நபர்களிடம் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும்.
  • சற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் அதிகளவில் ஏற்படும்.
  • உங்களது புத்திசாலித்தனத்தால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும்.அடிக்கடி மறதி தொல்லை ஏற்படும்.
  • குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும்.
  • உடன் பிறப்பு நலனில் அக்கறை எடுத்துகொள்ளவும். பூர்விக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
  • ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். குடும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
  • உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

 

மீன ராசி 

  • குடும்பத்தில் சொந்த பந்தங்களின் எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். குடும்ப வருமானம் வெளியில் சொல்லும் படி இருக்கும்.
  • மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
  • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம்.
  • பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • கணவன் மனைவி உறவில் தற்காலிக பிரிவு உண்டாகலாம்.
  • வாங்கிய கடனை சீக்கிரம் அடைத்து விடவும், இல்லை எனில் கடன் அதிகமாகும்.
  • குடும்பத்தில் உங்களுக்கு சம்பந்தம் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
  • உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!