சுவிற்சலாந்து பேர்ன் ஆரி நதியில் நீந்துதல்.

சுவிற்சலாந்து பேர்ன் ஆரி நதியில் நீந்துதல்.

பொழுது போக்கிற்காக பெரும்பாலானோர் பேர்ன் ஆரி நதியில் நீந்துவது வழக்கம். சில பேருக்கு நீந்தி வேலைக்கு செல்வது மிகவும் விநோதமானது. நீங்கள் நீந்தும் போது திடீரென ஒரு பியர் டின்னும் உங்களுடன் வரும்.

கோடைகாலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆரி நதியில் பாய்ந்து அல்லது அங்கிருக்கும் சிகப்பு நிற கம்பிகளை பிடித்து இறங்குவதனையும் காணலாம். ஏன் சுற்றுலாப்பயணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்கள் இதனை கண்டும் ரசிப்பார்கள்.

சிலருக்கு இந்த நதியை வீட்டிலிருந்து சில நிமிடங்களில் அடைந்துவிடலாம். இந்த நதியில் மிதந்த வண்ணம் நீங்கள் சாலையில் செல்லும் நண்பர்களை அல்லது தெரியாதவர்களை கூட பார்த்து ஒரு ஹாய் சொல்லலாம். மேலும் அதிக விளையாட்டுத்தனமாக சோர்வாக இருந்தீர்களானால் நதியில் அடித்தும் செல்லப்படுவீர்கள்.

மருந்துப்பாவனை குடியுடன் இருப்போர் இதனை தவிர்த்தல் நல்லது. சுமார் 24 பேர் வரை இதில் அமிழ்ந்தும் உள்ளனர் இந்தக் காரணத்தினால்.

மழைக்காலங்களில் ஆரி நதியானது நீர் நிரம்பி அடித்த வண்ணம் இருக்கும். அதனால் கரையில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. சுழிகள் மட்டுமல்ல மரக்குற்றிகளும் உங்கள் தலையில் இடி இடித்துவிடும். அமைதியான வேளையில் நீச்சல் காரர்களுக்கு நீந்துவது பேர்னை சுற்றி பார்ப்து எந்த கஷ்டமும் இராது.

ஒரு படகு அல்லது சிறிய கப்பல் மூலமும் நீங்கள் அழகிய பேர்ன நகரை இந்த நதியில் மிதந்த வண்ணம் பார்வையிடலாம். கோடை காலங்களில் இதன் வெப்பநிலை 15 தொடக்கம் 22 பாகை செல்சியஸ் இருக்கும். 

துான் நகரில் இருந்து ஒரு வாடகைக்கு எடுத்த படகு மூலம் 3-4 மணி நேர விறுப்பான உல்லசத்தையும் இ்ந்த ஆரி நதியில் மிதந்து சிற்றுண்டிகளையும் பானங்களை கொடுந்துவந்து ஆனந்தமாக மிதக்கலாம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4