இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரு புதிய நோய்கள்

#Covid 19
Keerthi
4 years ago
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரு  புதிய நோய்கள்

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரண்டு புதிய நோய் நிலைமைகள் தொடர்பில், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கண்டறியப்பட்ட நோய்களாக, சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெட்டிக் நியூமோனியா முதலான இரு நோய்கள் உள்ளதாக சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வயதானவர்களிடையே மாத்திரம் பெருவாரியாக அடையாளம் காணப்பட்ட இந்த நோய் நிலைமையானது, தற்போது கொரோனா தொற்று உறுதியான சிறுவர்களிடமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுவாசிப்பதற்கு இயலாத நிலை ஏற்படாமல், நடமாடக்கூடிய சிறுவர்களுக்கு, பிராணவாயுவின் நிலையானது குறைந்த மட்டத்திற்கு செல்லும் தன்மை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சாதாரண நிலையில் பிராணவாயு சாதாரண மட்டத்தில் இருக்கின்றபோதிலும், நடமாடும் சந்தர்ப்பத்தில் பிராணவாயு நிலை குறைவடையும் என்றும், அது மோசமான நிலையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நோய் நிலைமையிலிருந்து விடுபடுவதற்கு, நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் குருதியில் உள்ள பிராணவாயுவின் அளவை பரிசோதித்து பார்ப்பது சிறந்ததாகும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4