கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் எடுத்துக்கொண்ட மங்கள ஏன் இறந்தார்?

#Mangala Samaraweera #Covid 19 #Covid Vaccine #Death
Prathees
4 years ago
கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் எடுத்துக்கொண்ட மங்கள ஏன் இறந்தார்?

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதாக கூறப்படுகிறது.

எனினும், அவர் நீண்ட நாட்களாக நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வருவதாகவும் அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவிட் நிமோனியா காரணமாக பல நாட்களாக அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த முன்னாள் அமைச்சர், சிகிச்சை பெற்று படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக டொக்டர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார்.

படிப்படியாக குணமடைந்து வரும் மங்கள சமரவீரவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும்இ தானும் மருத்துவமனை ஊழியர்களும் அவரைக் காப்பாற்ற  நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்  குறிப்பிட்டார்.

எனினும், முன்னாள் அமைச்சர் இந்த நோயின் தீவிரத்தினால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக .டொக்டர் பிரியங்கர மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4