ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 25திற்கும் அதிக ஆசிரியர்கள் உயிரிழப்புஅதிகமானோர் பாதிப்பு

#Sri Lanka Teachers #Death #Covid 19 #Covid Variant
Yuga
4 years ago
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 25திற்கும் அதிக ஆசிரியர்கள் உயிரிழப்புஅதிகமானோர் பாதிப்பு

கொவிட் தொற்றுக்குள்ளான 25திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவிக்கின்றார்.

இவ்வாறு உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களும், அண்மையில் நடைபெற்ற அதிபர் − ஆசிரியர் சமபபள முரண்பாடு ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்துக்கொண்டவர்கள் என்பதனை தான் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா, வலபனை, ஆணமடு, சிலாபம், அநுராதபுரம், புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 400ற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இதுவரை கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதிபர் − ஆசிரியர் ஆர்ப்பாட்டம் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இணைய வழி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட குறிப்பிடுகின்றார்.

     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4