சுவிற்சலாந்து கொவிட் நிலைமை

சுவிற்சலாந்து கொவிட் நிலைமை

சுவிஸ் அரசாங்கம் தவறணைகள், உணவுச்சாலைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு மககள் செல்ல கொவிட் அனுமதியை கட்டாயமாக்க கருதுகிறது.

கொவிட் தொற்று வைத்தியசாலைகளில் அதிகரிப்பதால் இந்த கொவிட் சான்றிதழை கட்டாயப்படுத்தும் நடைமுறையை சுவிஸ் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது.

இதன் படி ஏற்றுக்கொள்ளக்கூடிய கொவிட் சான்றிதழ் தவறணைகள், உணவுச்சாலைகள், சிகை அலங்கார நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தேவைப்படும்.

தற்போது கொவிட் சான்றிதழனாது ஒருவர் தடுப்புசி ஏற்றியுள்ளாரா? குணமாகியுள்ளாரா? அல்லது தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளாரா என இரவு நேர களியாட்ட விடுதிகள். டிஸ்கோக்கள், மற்றும் 1000 பேருக்கு மேற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றிற்கு அவசியமாகிறது சுவிற்சலாந்தில்.

சுவிஸ் அதிகாரிகள் இந்த நடைமுறை முக்கியமானது என்று குறிப்பிடுகிறார்கள். காரணம் இது நிலைமையை வழமைக்கு கொண்டுவரவும், தடுப்புசி ஏற்றிக்கொள்ளவும் உதவும்..

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4