நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்த இருவர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்த இருவர் கைது

பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அந்த பெண்ணின் புகைப்படங்களை பேஸ்புக் மூலம் எடுத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நேற்று (27) இரண்டு இளைஞர்களும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரின் இரண்டு கணினிகள் மற்றும் இரண்டு செல்போன்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலன்னறுவை மற்றும் அங்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று (28) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4