நேற்றைய தினம் இலங்கையில் 192 கொரோனா மரணங்கள்

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #SriLanka #Death
Nila
4 years ago
நேற்றைய தினம் இலங்கையில் 192 கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா  மரணங்களின் எண்ணிக்கை 8,775ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 83 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 30 வயது  முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் 36 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 156 பேரும் என 192 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

கடந்த நாட்களை விட நேற்றைய தினம் 200க்கும் குறைவான உயிரிழப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4