சிறையில் 276 முறை இரத்தமாற்றம் செய்யப்பட்ட பொட்ட நௌபர்

#BLOOD
Prathees
4 years ago
சிறையில் 276 முறை இரத்தமாற்றம் செய்யப்பட்ட பொட்ட நௌபர்

கொரொனாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு சிறை மருத்துவமனையில் நேற்று முன்தினம் (28) உயிரிழந்த மொஹமட் நௌபர்  என்ற பொட்ட நௌபர்  சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் அவருக்கு சிறையில் இருக்கும்போது 276 இரத்தமாற்றம் (டயாலிசிஸ்) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நௌபருக்கு  இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக  சிறைச்சாலை வைத்திய அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரத்தமாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஒவ்வொரு இரத்தமாற்றத்திற்கும் எட்டாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிர சிகிச்சைக்காக கடந்த 28 ம் திகதி இரவு 11.45 மணிக்கு ஹோமாகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலை மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இறக்கும் போது பொட்ட நௌபருக்கு 59 வயது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4