செம்மறி ஆடு மேய்ப்பவரை தாக்க முயன்ற ஓநாய்கள்...

செம்மறி ஆடு மேய்ப்பவரை தாக்க முயன்ற ஓநாய்கள்...

கன்டோன் கிராப்புன்டனில் ஒரு செம்மறியாடு மேய்ப்பவரை ஒநாய் தாக்க முயன்றதால் அக்கன்டோன், ஓநாய்களை சுட்டுக்கொல்லும் படி அறிவித்துள்ளது. இவ்வாறு இவர் இருதடவைகள் தாக்குதலுக்குட்பட்டமையால் கன்டோனிலில் இந்த ஒநாய்களை சுட தேடித்திரிகின்றனர். இந்த ஆடு மேய்பவர் இச்சம்பவத்தின் போது காயமேதும் ஏற்படமால் ஒநாய்களிடம் இருந்து தப்பித்துவிட்டார்.

முதலாவது தாக்குதல் சம்பவத்தின் போது ஒநாய் இவரை பின்புறமாக, இவரும் இவரின் நாயும் ஒரு பாதிரியாரை சந்திக்க சென்றபோது தாக்க முயன்றிருக்கிறது. இவர் பலத்த சத்தத்துடன் கத்தியதால் ஓநாய் ஓடிச்சென்றுவிட்டது.

ஒரு கிழமையின் பின் இந்த ஆடு மேய்பவரை 3 ஓநாய்கள் தாக்க முற்பட்டுள்ளது. அவ்வேளை அவரது நாய் காயங்களுக்குட்பட்டுள்ளது. அவ்வேளையிலும் இவர் சத்தமிட்டதால் அந்த ஒநாய்கள் ஓடிவிட்டன. அதே நாள் இவர் 5 ஓநாய்களையும் 6 குட்டிகளையும் வேறு தொலைவில் கண்டுள்ளார். கன்டோன் காவற்காரர் இந்த ஓநாய்களின் வேட்டை பற்றி ஏற்றுக்கொண்டுள்ளார். இவை ஆபத்தானவை தான் என்று நம்புகிறார், காரணம் இதற்கு முன்னர் பல கால்நடைகள் இவற்றினால் கொல்லப்பட்டுள்ளது. 

இதனால் கிராப்புன்டனின் வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடி அலுவலம் இந்த ஓநாய்ளை சுடும் படி உத்தரவு வழங்கியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4