இலங்கையில் 214 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #SriLanka #Death
Nila
4 years ago
இலங்கையில் 214 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாட்டில் நேற்று  (29.8.2021) கொரோனா தொற்றால் மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று திங்கட்கிழமை 216 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 115 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 30 வயதிற்கு கீழ்பட்டவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களுமாக 5 பேரும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் 21 ஆண்களும் 20 பெண்களுமாக 41 பேரும் 60 வயதிற்க மேற்பட்டவர்களில் 91 ஆண்களும் 79 பெண்களுமாக 170 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை இன்றையதினம் இரவு 9 மணிவரை 4,562 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 436,081 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 371 992 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 50 752 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4