இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்!

Prasu
4 years ago
இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் முழுமையாக வந்துள்ளது.

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் கடனுதவியையும் சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது. 

பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானுடனான தூதரக தொடர்பை துண்டித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தையும் பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. அதேபோல், பிறநாடுகளுடனான வர்த்தகத்தை ஆப்கானிஸ்தானும் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சர்க்கரை வர்த்தகம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தியா ஆண்டு தோறும் 6 லட்சம் முதல் 7 லட்சம் டன் சர்க்கரையை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், தற்போது தலீபான்கள் கைப்பற்றியதையடுத்து இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை ஆப்கானிஸ்தான் அரசு கிட்டத்தட்ட முழுவதும் நிறுத்தியுள்ளது. 

மேலும், அந்நாட்டில் உள்ள வர்த்தகர்களும் இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதையும் ஏறத்தாழ நிறுத்தியுள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தானில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4