30 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

Prasu
3 years ago
30 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் 16 முதல் ஜூலை 31ம் தேதி வரை இந்தியாவில் +91 என்ற செல்போன் எண்ணில் தொடங்கும் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் 95 சதவீதக் கணக்குகள் அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாக முடக்கப்பட்டன.

இந்த காலக்கட்டத்தில் (ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை) கணக்குகளை முடக்குதல், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல் என 594 புகார்கள் வந்தன. அதில், 74 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் பெற்ற புகார்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தவறுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!