02.09.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
3 years ago
02.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: விரைந்து செயல்பட்டு வெல்வீர்கள். சோர்வு நீங்கும்.

பரணி: புதியவர்களின் அறிமுகம் நல்ல திருப்பத்தைத் தரும்.

கார்த்திகை 1: அக்கம் பக்கத்தினரோடு ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

 

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பணியாளர்களை ஊக்கப்படுத்தி பணியை முடிப்பீர்கள்.

ரோகிணி: கடன் தொல்லையை ஈடுகட்டுவீர்கள். நிம்மதி மீளும்.

மிருகசீரிடம் 1,2: ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் மிகும். பயம் நீங்கும்.

 

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த கடன் உதவியை இன்று பெறுவீர்கள்.

திருவாதிரை: குடும்பத்தில் தோன்றும் பிரச்னையை எளிதாக சமாளிப்பீர்கள்.

புனர்பூசம் 1,2,3: தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பீர்கள்.

 

கடகம்: 

புனர்பூசம் 4: வழிபாட்டிற்காக வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தது மாறும்

பூசம்: எதிர்பார்த்த பணவரவு கிடைக்க சற்று அதிகம் மெனக்கெடுவீர்கள்.

ஆயில்யம்: புதிய முயற்சியில் நிதானம் அவசியம். உறவினர் சந்திப்பு நிகழும்.

 

சிம்மம்:

 மகம்: சுபச்செலவுகளை மனதாரச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூரம்: பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவோடு நன்மை அடைவீர்கள்.

உத்திரம் 1: நண்பர்களின் உழைப்பில் உங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.

 

கன்னி: 

உத்திரம் 2,3,4: பணியாளர்கள் இடமாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு வரும்.

அஸ்தம்: திட்டமிட்ட விஷயம் சிறு தடங்கலுக்கு பின் சிறப்பாக நடக்கும்.

சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

 

துலாம்: 

சித்திரை 3,4: எதிர்பாராத செலவு ஒன்று வந்தாலும் மன நிறைவு உண்டு.

சுவாதி: எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதற்கு அதிகம் முயற்சிப்பீர்கள்.

விசாகம் 1,2,3: அலைச்சலுக்குப் பின் நன்மை வரும். மனம் மகிழும்.

 

விருச்சிகம்: 

விசாகம் 4: மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்து மறையும்.

அனுஷம்: சொத்து வாங்குவது பற்றி சிறிய தடைகள் இருக்கும்.

கேட்டை: வீண் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் பிரச்னை இல்லை.

 

தனுசு:

மூலம்: பேச்சிலும், செயலிலும் அதிக கவனம் தேவை.

பூராடம்: சிலருடைய தேவையற்ற போக்கு பற்றி மன வேதனை வேண்டாம்..

உத்திராடம் 1: நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் குழப்பம் தரும்.

 

மகரம்:

 உத்திராடம் 2,3,4: பொறுப்புடன் உழைப்பவர்கள் நல்ல திருப்பம் காண்பார்கள்.

திருவோணம்: பணிகளில் அக்கறை செலுத்தி நன்மை அடைவீர்கள்.

அவிட்டம் 1,2: பழி தரக்கூடிய நண்பர்களின் சேர்க்கை வேண்டாம்.

 

கும்பம்: 

அவிட்டம் 3,4: சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

சதயம்: குடும்பத்தில் பணவரவுகள் அதிகமாகும். மகிழ்ச்சி கூடும்.

பூரட்டாதி 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றி திட்டமிடும்போது பதற்றம் வேண்டாம்.

 

மீனம்: 

பூரட்டாதி 4: ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்பி திட்டமிடுவீர்கள்.

உத்திரட்டாதி: வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

ரேவதி: அலைச்சலும், பதற்றமும் இல்லாமல் எதையும் செய்யப்பாருங்கள்.