இந்தியர்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்கும் அபாயம்!

Prabha Praneetha
3 years ago
இந்தியர்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்கும் அபாயம்!

கடுமையான காற்று மாசுப்பாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் வரை குறைவடைவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், உலகின் வேறு எந்த பகுதிகளிலும் இல்லாததை விட 10 மடங்கு மோசமான மாசு அளவு வட இந்தியாவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கை கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பூமியில் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து இடங்களில் இந்தியா தொடர்ந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!