செல்போனை Pegasus Spyware மூலம் முடக்க முடியும்

செல்போனை Pegasus Spyware மூலம் முடக்க முடியும்

இஸ்ரேலை தலைமையிடமாக கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தை அந்நாட்டு ராணுவத்தின் உளவு பிரிவில் பணியாற்றிய 2 பேர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.இந்த நிறுவனமானது உளவு பணிகளுக்காகவே பிரத்யேகமாக பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கியது. தீவிரவாத தடுப்பு மற்றும் மிகப்பெரிய கிரிமினல் குற்றவாளிகளை கண்டறியவே இந்த பெகாசஸ் ஸ்பைவேர் உருவாக்கப்பட்டதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்தது. அதாவது, அரசுகளுக்கு மட்டுமே என்எஸ்ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்க முடியும். அமெரிக்கா தவிர்த்த உலகின் எந்தஒரு நாட்டிலும் செல்போனை பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் முடக்கி உளவு தகவல்களை தமது வாடிக்கையாளர்களுக்கு என்எஸ்ஓ நிறுவனம் அளிக்கும்.

ஆப்பிள் போனோ ஆண்டிராயிட் போனோ எதுவாக இருந்தாலும் உளவு அமைப்புகளால் பெகாசஸ் செயலியின் மூலம் ஊடுருவி பயனர்களின் தரவுகளை திருடி அவர்களின் தொலைபேசியை கட்டுப்படுத்தி கண்காணிக்க முடியும். இந்த பெகாசஸ் ஸ்பைவேரை அரசுகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும் மட்டுமே என்எஸ்ஓ நிறுவனம் அளிக்கும்.பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கிடைக்கும் உளவு தகவல்களின் அடிப்படையில், அந்தந்த அரசுகள் தமது அடுத்தகட்ட நடவடிக்கையை வகுத்துக்கொள்ளும்.

2014ம் ஆண்டு வரை தமது செயல்பாடுகளை ரகசியமாக வைத்து இருந்த என்எஸ்ஓ நிறுவனம், அதன்பிறகு தனது இறுக்கத்தை தளர்த்தியது. அண்மையில் வெளியிட்ட 2021ம் ஆண்டு அறிக்கையில் 40 நாடுகளைச் சேர்ந்த 60 அமைப்புகள் தங்களிடம் வாடிக்கையாளர்களாக இருப்பதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்தது.மனித உரிமைகளை பாதுகாப்பதில் மிக மோசம் என்று அடையாளம் காணப்பட்ட 55 நாடுகளுக்கு பெகாசஸ் ஸ்பைவேர் தரப்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.ஒப்பந்த விதிகளை மீறி உளவுத் தகவல்களை பயன்படுத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன் அத்தகைய அமைப்புகளுக்கு பெகாஸஸ் பைபர் செயல்பாட்டை நிறுத்திவிடுவோம் என்கிறது என்எஸ்ஓ நிறுவனம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!