தென் ஆப்பிரிக்கா அணிக்கு 301 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி!

Prasu
4 years ago
தென் ஆப்பிரிக்கா அணிக்கு 301  ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக தற்போது நடைபெற்று வருகின்றது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

அவிஸ்க பெர்ணான்டோ தனது மூன்றாவது ஒரு நாள் போட்டி சதத்தை இன்று தனதாக்கிக் கொண்டுள்ளார்.

தனஞ்ஜய டி சில்வா 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஷரித்த அசலங்க 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4