இரண்டு தலை கன்றை ஈன்ற ராஜஸ்தான் எருமை!

Prasu
4 years ago
 இரண்டு தலை கன்றை ஈன்ற ராஜஸ்தான் எருமை!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரை அடுத்த பூரா சிக்கிரஉடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் வீட்டில் எருமை மாட்டை வளர்த்து வந்தார். அந்த மாடு கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது.

அந்த எருமை கன்றுக்கு அதிசயமாக இரண்டு தலைகள் மற்றும் இரண்டு கழுத்துக்கள் இருக்கிறது. இரண்டு மூக்கு, இரண்டு வாய் என கழுத்துக்கு மேலே இருப்பது எல்லாம் இரண்டாகவும், கழுத்திற்கு கீழே இருப்பது எல்லாம் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் எல்லோரும் அங்கு வந்து அந்த அதிசய கன்றை பார்த்து செல்கின்றனர்.

எந்த எருமை கன்றிற்கு புட்டியில் பால் கொடுத்தனர். எருமை இரண்டு வாய் மூலமும் பாலை குடித்தது. அதன் பின் கால் நடை மருத்துவர் வந்து அந்த கன்றை சோதித்து கன்றும், தாய் எருமையும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4