Ind Vs Eng Test - 191 ஓட்டங்களுக்கு இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஐ முடித்த இங்கிலாந்து அணி!

Prasu
4 years ago
Ind  Vs  Eng Test - 191  ஓட்டங்களுக்கு  இந்தியாவின் முதல்  இன்னிங்ஸ் ஐ முடித்த இங்கிலாந்து அணி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 11 ரன்கள், கே.எல்.ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.

ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இந்த நெருக்கடியான  நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4