ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Prasu
4 years ago
ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

''ஆப்கன் மக்களுக்கான உணவுப் பொருட்கள் கையிருப்பு இந்த மாதத்துடன் தீர்ந்து விடும்,'' என, அந்த நாட்டுக்கான ஐ.நா., துணை சிறப்பு பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ் எச்சரித்துஉள்ளார். தெற்காசிய நாடான ஆப்கனில் நான்கு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் தலிபான் ஆட்சிக்கு அஞ்சி இடம் பெயர்ந்து வருகின்றனர். 800 குழந்தைகள்உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பரிதவிக்கும் அவர்களுக்கு ஐ.நா., உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.இந்நிலையில் ஐ.நா., துணை சிறப்பு பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆப்கனுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இந்த மாதத்துடன் தீர்ந்து விடும். அதன் பின் ஒரு கோடி பேருக்கு அன்றாடம் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்படும்.

இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க குறைந்த பட்சம் 1,500 கோடி ரூபாய் தேவைப்படும். ஆப்கனில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இக்குழந்தைகளுக்கு இனி உணவு கூட கிடைக்காத நிலை உண்டாகும். காபூல் விமான நிலையத்தில் மட்டும் 800 குழந்தைகள் உள்ளனர்.உலக நாடுகள் ஆப்கன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை வழங்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பாக்., வழியாக ஆப்கனின் மசார் - இ - ஷெரிப் விமான நிலையத்திற்கு வாகனங்கள் வாயிலாக 600 டன் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை ஐ.நா., அனுப்பியுள்ளது. மிகப் பெரிய சவால்இதற்கிடையே ஆப்கனில் ஆட்சி மாற்றம் காரணமாக ஊதியம் கிடைக்காமல் பள்ளி ஆசிரியர்கள், பொதுத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.'ஆப்கனில் ஏற்பட உள்ள உணவுப் பஞ்சம், பொருளாதார சீர்குலைவு போன்றவற்றை சமாளிப்பது தலிபானுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்' என, அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4