சீனத் தடுப்பூசி: வடகொரியா நிராகரிப்பு

Prasu
4 years ago
சீனத் தடுப்பூசி: வடகொரியா நிராகரிப்பு

சீனாவிலிருந்து வந்த 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை யுனிசெஃப் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள், ‛சீனாவிலிருந்து கொரோனா பரவுகிறது' என்ற தகவல் வெளியானவுடன் முதல் நாடாக நாடு முழுவதும் ஊரடங்கை வடகொரியா அதிரடியாக அறிவித்தது. இதுவரை வடகொரியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்த வில்லை. வடகொரியாவும் வெளிப்படையாக கொரோனா பாதிப்பு குறித்து தகவல் தருவதில்லை.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வடகொரியாவுக்கு சீனா வழங்கி வந்தது. சீனா வழங்கிய சுமார் 30 லட்சம் சினோவாக் கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது. வடகொரியா நிராகரித்த கொரோனா தடுப்பூசிகள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை யுனிசெப் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் பல்வேறு நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தடுப்பூசிகள் கிடைக்காத நாடுகள் கூட உள்ளன. ஆனால், 30 லட்சம் சீனா தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4