உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ்

Keerthi
4 years ago
உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ்

உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள கராமா (Karama)-வில் அமைந்துள்ள O’Pao என்ற உணவகம் இந்திய உணவுகளை பரிமாறுவதற்கு பெயர் பெற்றது. இந்த உணவகம் காராட்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் மிகவும் பரவலான ஒரு சாலையோர உணவான வடப்பாவின் சுவைக்கு சற்றும் குறைக்காமல் வழங்கி வருகிறது.

இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் மிகவும் சுவையான, அதிக ரகங்களை சமைத்து பரிமாறுகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் இந்த பட்டியலில் கூடுதலாக ஒன்றை இணைத்துள்ளது O’Pao.

அது தான் தங்கம் சேர்க்கப்பட்ட வடா பாவ். சும்மா இல்லைங்க 22 கேரட் தங்கம் சேர்க்கப்பட்ட வடப்பாவ். மரப்பெட்டியில் வைத்து நைட்ரஜன் புகையோடு அழகாக பரிமாறப்படும் இந்த உணவு சீஸ் மற்றும் ஃப்ரெஞ்ச் ட்ரஃபில் பட்டர் கொண்டு சமைக்கப்படுகிறது.

மேலும், இதம் மேல் ஹோம்மேட் மிண்ட் மயோ, sweet potato fries மற்றும் mint lemonade சேர்த்து வழங்கப்படுகிறது. சரி, இதோட விலை என்னனு கேக்கலையே கொஞ்சம் கம்மி தான் வெறும் ரூ. 2000 மட்டும் தானாம்.

ஏற்கனவே துபாயில் தங்க பர்கர், ஐஸ் க்ரீம், ஃப்ரெஞ்ச் டோஸ்ட் மற்றும் பிரியாணி எல்லாம் செய்த இவர்களுக்கு இந்த தங்க “வடப்பாவ்” ஒன்றும் புதிதில்லை.... 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4