சீனி 130 ரூபாய்க்கு விற்பனை! முடக்க நிலையை மறந்த மக்கள் !

#SriLanka #sugar #prices #people
Yuga
4 years ago
சீனி 130 ரூபாய்க்கு விற்பனை! முடக்க நிலையை மறந்த மக்கள் !

நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சில அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கல்முனை அரச லங்கா சதொசவில் இன்று (03) சீனி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சிவப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வருகின்றனர். சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 130 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கையிருப்பிலுள்ள சிவப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை நாம் கல்முனை லங்கா சதொச ஊடாக வழங்குவதற்கு தயாராக உள்ளதாக முகாமையாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4