இளையராஜா இசையமைக்கும் படத்தில் 12 பாடல்கள்!

Keerthi
4 years ago
இளையராஜா இசையமைக்கும் படத்தில் 12 பாடல்கள்!

இளையராஜா இசையமைக்கும் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு காணாத இளையராஜா ரசிகனே இருக்க முடியாது!

விரைவில் அந்த அனுபவம் கிடைக்கப் போகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி ஃபிலிம்ஸ், மியூசிக் ஸ்கூல் என்கிற படத்தைத் தயாரிக்கிறது. ஷர்மான் ஜோஷி,  ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பாபா ராவ் பியாலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மியூசிக் ஸ்கூல் படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

காதலும் இசையும் கொண்ட படத்தின் கதையை இசை மேலும் மெருகூட்டுகிறது. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை. அற்புதமான பாடல்கள் கொண்ட இப்படத்தை மக்கள் திரையரங்கில் ரசிக்கவேண்டும். அத்தருணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று இயக்குநர் பியாலா கூறியுள்ளார். சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4