Ind Vs Eng Test -இரண்டாம் நாள் முடிவில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி

Prasu
4 years ago
Ind  Vs  Eng  Test -இரண்டாம் நாள் முடிவில் 290  ஓட்டங்களுக்கு  சகல விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாக்குர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4 விக்கெட், ராபின்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. மலான் 31 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 37 ரன்னும், மொயீன் அலி 35 ரன்னும் எடுத்தனர். 

ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 81 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4