ஜெர்மனியில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

#Covid 19
Keerthi
4 years ago
ஜெர்மனியில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியை தாண்டியது. அவர்களில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா-வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 14-வது இடத்தில் உள்ளது
 
இந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 12,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்குகிறது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4