மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு

Prabha Praneetha
3 years ago
மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தார்.

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ம் திகதி டெல்லி சென்றார். 

நேற்று முன்தினம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பொழுதே குறித்த மனுவை அவரிடம் ஒப்படைத்தார் .

அதில் தெலுங்கானாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதிச்சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றை அமைக்க வேண்டும், வாரங்கல் ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,000 கோடி மானிய உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.