நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் தகவல்களை கோரும் அரசாங்கம்

#Newzealand #SriLanka
Yuga
4 years ago
நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் தகவல்களை கோரும் அரசாங்கம்

நியூஸிலாந்தின் – ஆக்லாந்தில் தாக்குதல் நடத்தியமைக்காக பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது.

இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்தின் – ஆக்லாந்தில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் என்றும், இது பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்திருந்தார்.

எனினும் இவர் தொடர்பில் தகவல் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே அவர் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4