நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#Newzealand #Batticaloa #Police
Yuga
4 years ago
நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தின், ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு – காத்தான்குடியை சேர்ந்தவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அவரை பின் தொடர்ந்து வந்த பொலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு – காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பிற்கு சென்று அங்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும், பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4