'சித்தப்பா..'' : இயக்குநர் செல்வராகவன் மகனுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வைரல்

#TamilCinema
'சித்தப்பா..'' : இயக்குநர் செல்வராகவன் மகனுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வைரல்

இயக்குநர் செல்வராகவனின் மகனுடன் அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இயக்குநர் செல்வராகவனுக்கு சமீபத்தில் 3வதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படங்களை, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தனுஷுடன் தனது மகன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த கீதாஞ்சலி, ''வணக்கம் சித்தப்பா, நான் கிங் காங் விளையாடலாமா?'' என்று குழந்தை கேட்பது போல் பதிவு செய்துள்ளார். அதற்கு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

 
செல்வராகவன் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஒரு நடிகராக செல்வராகவனின் பணியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4