யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள்

#Jaffna #SriLanka #NorthernProvince #Police
Nila
4 years ago
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள்

யாழ்.வட்டுக்கோட்டை - அராலி - செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று  அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். 

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைக் கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா அதிஅக்ரித்துவரும் நிலையில் மக்களை வீட்டு வெளியே அநாவசியமாக நடமாடவேண்டாம் என கட்டளையிடப்பட்டும் அதனையும் மீறி மக்கள் நடமாடுவதும் , இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதும் மக்கள் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு காரணமாகின்றன என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4