துப்பாக்கிச் சூட்டில் பலியான  சன்சைன் சுத்தாவிற்கு கோவிட்

#Death #Police #Corona Virus #Covid 19
Prathees
4 years ago
துப்பாக்கிச் சூட்டில் பலியான  சன்சைன் சுத்தாவிற்கு கோவிட்

மாத்தறை, வெலிகம கொட்டவில பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அமில பிரசன்ன எனும் சன்சைன் சுத்தா கோவிவிட் நோய்த்தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொட்டவில வரகாப்பிட்டிய பாடசாலைக்கு அருகில் காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  அவர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

31 வயதான சன்சைன் சுத்தா பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4