கிளியோபாட்ரா சீசரை தன் வலையில் வீழ்த்தினாள் ஏன்?

கிளியோபாட்ரா சீசரை தன் வலையில் வீழ்த்தினாள் ஏன்?

கிளியோபாட்ராவின் காலம் கி.மு. 69 இல் இருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரென்டாம் டொலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசி்க்கும் பிறந்தவள் கிளியோபட்ரா.

சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவிற்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள்  இருந்திருக்கிறார்கள். முந்தைய ஏழு பேர் பெறாத பெயரையும் புகழையும் இவள் தான் பெற்றாள்.

முதலாவது இவளது புத்திசாலித்தனம். ஆடுத்த காரணம் அழகு.

வெறும் 39 வயது வரைக்கும்தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். மிகச்சிறிய வயதிலேயே அரசியானவள் என்றாலும், ராஜாங்க காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பது., அவற்றின் இரசாயன மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான சென்ட்களை கண்டுபிடித்ததாகவும் கூறுகிறார்கள்.

இது போததென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச படிக்கவும் தெரியும். கிளியோபாட்ராவின் தந்தையான டொலமிக்கு வயதானதும் தன் மகளைப்பட்டத்தில் அமரத்த விரும்பியிருக்கிறார். அந்தக்காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. இதில் இன்னொரு விடயமும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டும் மல்ல, அப்போது தம்பியுடன் சேர்ந்தும் ஆளமுடியாது!

ஒரு வழி யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வேண்டுமானல் ஆட்சி செய்யலாம். ஆகவே, கிளியோபாட்ரா தன் 10 வயதுத் தம்பியான அந்த டொலமியை திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக பதினெட்டு வயது ராணி பத்து வயது ராஜா ஆட்சியெல்லாம் நன்றாகத்தான் நடந்தது.

ஆனால் அந்தச் சிறுவன் மனதை சில பேர் கெடுத்துவிட்டார்கள். நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய நீ சும்மா இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது? என்று துாண்டி விட்டார்கள்.

ஆகவே, டொலமி தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராது கிளியோபாட்ராவிற்கு எதிராக புரட்சியைத் துாண்டிவிட்டு அவள் உயருக்கு உலை வைத்தாள். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ரா சிரியாவிற்குத் தப்பியோடிளாள்.

இந்தச் சமயத்தில்தான் ஜுலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். மாபெரும் வீரர், சீசரை வைத்து எப்படியாவது எகிப்து ஆட்சி பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா சீசரை தன் வலையில் வீழ்த்தினாள்.

காதலை விலையாக்கினாள்.

கசக்குமா சீசருக்கு? இயல்பிலே மாவீரன் அல்லவா? இதோ ஒரே நாளில் எகிப்தை உனதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டான்.

மீண்டும் எகிப்தி்ன் மணி முடியைப் பெற்ற கிளியோபாட்ரா தொடர்ந்து சீசருடன் வாழ்ந்தாள். ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.

அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் சத்திர சிக்சை மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச்செய்தது சீசர் இன்றைக்கு வரை மருத்துவத்துறை சத்திரசிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது.

கிளியோபாட்ராவின் மரணம்

சீசரை ஏற்காத எகிப்து இராஜதந்திரிகள் திட்டமிட்டு சீசரை நயவஞ்சகமாக கொன்றனர். அதன் பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழ்ந்தது. கணவர் துணையின்றி இருந்த கிளியோபாட்ரா இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள்.

அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார். ஆண்டனியின் வாரிசுகாளக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தாள்.

இந்நிலையில் சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபாட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதலில் ஆண்டனி கொல்லப்பட்டார்.

ஆண்டனியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபாட்ரா தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள்.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கத்திலிருந்த கொடி தாவர விஷத்தினையே உண்டு இறந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அழகு ஆபத்து என்ற பழமொழி உண்டு. உலகிலேயே மாபெரும் அழகியாக கருதப்பட்ட கிளியோபாட்ரா இறந்தபின்னும் அவள் அழகு அவளுக்கு பேராபத்தாக இருந்தது.
இறந்த பின் அவளின் சடல உடல் மூன்று நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது. அதுவும் ஒருவரால் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு வந்தார்கள் என்றும் குறிப்புகள் கூறுகின்றன.