இலங்கையில் குறைந்துவரும் கொரோனா உயிரிழப்புக்கள் - நேற்று 145 பேர் பலி

#Corona Virus #Covid 19 #Death #SriLanka
Nila
4 years ago
இலங்கையில் குறைந்துவரும் கொரோனா உயிரிழப்புக்கள் - நேற்று 145 பேர் பலி

இலங்கையில் நேற்றையதினம் பதிவான கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 145 ஆகும். கடந்த பல நாட்களை விட நேற்று குறிப்பிடத்தக்க சரிவை உறுதி செய்தது.

கடந்த சில நாட்களில் இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமாக இருந்துள்ளது.

நேற்று பதிவான இறப்புகளில், 30 வயதிற்குட்பட்ட 04 இறப்புகளும், 30-59 வயதுக்குட்பட்ட 24 இறப்புகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 117 இறப்புகளும் அடங்கும்.

இதில் 77 ஆண்களும் 68 பெண்களும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இறந்தனர்.

இந்த 145 இறப்புகளுடன், இலங்கையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9951 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கத

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4