2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

Prasu
4 years ago
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைடுத்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 284 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4