ஜெயலலிதா எம்.ஜி.ஆர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத் (புகைப்படம் உள்ளே)

Prasu
4 years ago
ஜெயலலிதா எம்.ஜி.ஆர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத் (புகைப்படம் உள்ளே)

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையொட்டி தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை வந்துள்ள நடிகை கங்கனா ரணாவத், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர். அப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் உடனிருந்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4