இந்தியப் பயணிகளுக்கான தடையை நீக்கியது பிலிப்பின்ஸ்

#India
Keerthi
4 years ago
இந்தியப் பயணிகளுக்கான தடையை நீக்கியது பிலிப்பின்ஸ்

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததையடுத்து, இந்தியப் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில், அத்தடை நீக்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பிலிப்பின்ஸ் அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் ஹேரி ராக் கூறுகையில், ''இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சோந்த பயணிகள் பிலிப்பின்ஸுக்குப் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. அவா்கள் வரும் 6-ஆம் தேதி முதல் பிலிப்பின்ஸுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்'' என்றாா்.

விதிகளை மாற்றியது துருக்கி: துருக்கிக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பயணிகள், கரோனா பரிசோதனை சான்றிதழை சமா்ப்பிப்பது கட்டாயம் என்று அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்தியாவுக்கான துருக்கி தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு இல்லை என்ற உறுதிச் சான்றிதழை இந்தியப் பயணிகள் சமா்ப்பிக்க வேண்டியது செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4