சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது:- நாமல்

Prabha Praneetha
4 years ago
சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது:- நாமல்

இனம் ,மதம் ,மொழி  அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பைசர் தடுப்பூ ஏற்றப்படுவது குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,

தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை, எந்த வகை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சே தீர்மானிக்கும். கடந்த காலங்களில் மன்னார், கண்டி போன்ற இடங்களில் இந்த குற்றம் சுமத்தப்படும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கடந்த காலங்களில் இந்த தடுப்பூசி ஏற்றுகை பற்றி பேசப்படவில்லை. மாவட்டத்தைப் பார்த்து தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை, சுகாதார அமைச்சின் வழிமுறைகளுக்கு அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4