சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

Prabha Praneetha
4 years ago
 சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

 

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா, விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்குக்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உயிரியல் பூங்காவிலுள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

ஏற்கனவே அவர் அனு என்ற வெள்ளைப்புலியை 2018-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4