விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்த பகுதியில் துப்பாகிகள் மீட்பு!

#Police #Ampara #Weapons
Prathees
4 years ago
விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்த பகுதியில்  துப்பாகிகள் மீட்பு!

அம்பாறை கஞ்சிக்குடியாற்று பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சிக்குடியாற்று பகுதியில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் எல்.எம்.ஜீ துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாகிகளை பொலிஸார் இன்று  மீட்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேச விசேட புலனாய்வு பிரிவு  பெறுப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில்  இருந்த மலசல கூடத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அந்த பகுதியிலுள்ள மலை குகையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4