நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் கொள்ளும் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர்
நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பேர்சவரன்ஸ் ரோவர்-ஐ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் தகவல்களை சேகரிக்க இந்த ரோவர் சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டது. இதனுடன் இன்ஜெனூட்டி என்கிற சிறிய ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் செவ்வாய்கிரகத்தில் பல மாதங்களாக 12 சுற்றுகள் பறந்துவிட்ட நிலையில் இதற்கு ஓய்வு கொடுக்க நாசா விஞ்ஞானிகள் எண்ணினர். ஆனால், பேர்சேவேரன்ஸ் ரோவரைத் தொடர்ந்து படம்பிடித்துவரும் இந்த ஹெலிகாப்டர் இன்னும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஐந்து முறை இந்த ஹெலிகாப்டர் பறந்தாலே போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணிய நிலையில் இந்த ஹெலிகாப்டர் இன்னும் பறந்து கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்.
பூமிக்கு மேலே 30 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க விட்டால் எவ்வளவு காற்றழுத்தம் இருக்குமோ அதே அளவு அழுத்தம் செவ்வாய் கிரகத்தின் பரப்பில் உள்ளது. ஆனாலும் இந்த அதீத காற்றழுத்தத்தை தாங்கிக்கொண்டு இன்ஜெனூட்டி பறந்து வருகிறது. வெறும் 1.8 கிலோ எடைகொண்ட இந்த சிறிய ரக ஹெலிகாப்டர் சோலார் பேனல்கள் உதவியுடன் சூரிய ஒளி கொண்டு தனது பேட்டரியை சார்ஜ் செய்து கொள்கிறது. இரவில் செவ்வாய் கிரகத்தில் அதிக குளிரையும் தாக்குப்பிடித்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் நடக்கும் விஷயங்கள் 15 நிமிடம் தாமதமாக பூமிக்கு இந்த ஹெலிகாப்டர் மூலமாக வந்து சேரும். இந்த ஹெலிகாப்டரில் இதற்காக பலவித சென்சார்கள் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து 39 அடி உயரம் வரை இந்த ஹெலிகாப்டரால் பறக்க முடியும். இந்த ஹெலிகாப்டர் உடன் அதிநவீன கலர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இன்ஜெனூட்டி இந்த அளவுக்கு தகவல்களை சேகரிக்க செவ்வாய் கிரகத்தில் தட்பவெட்பம் காற்றில் உள்ள துகள்களின் அளவு காற்றின் வேகம் ஆகியவையும் சாதகமாக இருந்ததே முக்கிய காரணம் என்று நாசா பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓர் வேற்றுக்கிரகத்தில் பரந்த முதல் சிறிய வகை ஹெலிகாப்டர் என்ற பெயரை இன்ஜெனூட்டி இதன்மூலமாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.