இலங்கையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவுப்பு!

#SriLanka #Wheat flour #prices
Yuga
4 years ago
இலங்கையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவுப்பு!

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதியளிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகரித்துள்ளது.

கூடுதலான விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி, தொடர்ச்சியான தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் ஓய்வு பெற்ற தலைவர் மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என பிரிமா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கொழும்பில் நேற்று (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, “கோதுமை மாவை இறக்கமதி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின்னர், விலையை அதிகரிக்கமாட்டோம் என அந்நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்துள்ளன” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4