ஸ்ரீகாந்த் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

Prabha Praneetha
3 years ago
ஸ்ரீகாந்த் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த், நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்"  என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறும்போது, “இப்படம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். 

ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால் அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!