பிரார்த்தனைகளை நிறைவேற்றும் புற்றுக் கோவில் அம்மன்
#Temple
Reha
3 years ago
- நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக் கோவிலில்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு,அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான சர்வமங்கள மோகன குஜாம்பிகா சமேத கைலாச நாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
- கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது.நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து,பூஜைகள் நடை பெறாமல் இருந்து வந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.
- பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டு பிடிக்க முடிந்தது.மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.
- அதன் பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.
- கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது.
- மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.
- கைலாசநாத பெருமான்,சர்வமங்கள மோகன குஜாம்பிகை,விநாயகர்,திருச்செந்தூர் செந்தில்வேலன்,நர்த்தன விநாயகர்,ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி,தட்சிணாமூர்த்தி,பைரவர்,நாகர்,நந்தி,பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
- நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக் கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு,அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
- புற்றுக் கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.
- சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர்.அதுவே புற்று கோவிலாகும்.
- சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக் கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.