கனடா தேர்தலில் ஜஸ்டின் ரூடோ பின்வாங்குவாரா?

#world_news
கனடா தேர்தலில் ஜஸ்டின் ரூடோ பின்வாங்குவாரா?

செப்டம்பர் 20 நடைபெறவுள்ள கனேடிய தேர்தலுக்கு தற்போதைய பிரதமர் பின்வாங்கி விடுவாரோ என்ற அச்சம் பெரும்பாலும் அவருக்கு சாதமாக இருக்கும் தமிழர்களிடையேயும் இருந்து வருகிற நிலையில் அவரது கட்சியும் எதிர்க்கட்சிகளும் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கருத்துக் கணிப்பில் பின்தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆத்திரத்தில், திங்களன்று தனது முக்கிய போட்டியாளரை ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். கனடாவில் செப்டம்பர் 20ம் திகதி பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரதமர் ட்ரூடோ உட்பட முக்கிய தலைவர்கள் சுறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனிடையே, ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் 34.9% வெற்றி வாய்ப்புடனும் லிபரல் கட்சியினர் 33.4% வெற்றி வாய்ப்புடனும் புதிய ஜனநாயகக் கட்சி 18.9% வெற்றி வாய்ப்புகளுடனும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4